டெங்கு சிகிச்சை முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு
டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், தனியார் மருத்துவமனைகளில்
டெங்கு நோயாளிகள் அனுமதிக்க மறுக்கப்படுகிறார்கள் என சென்னை ஐகோர்ட்டில் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இன்று தமிழக அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ம் தேதி வரை 11,944 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.13.95 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்குவை கண்டறிய தமிழகம் முழுவதும் 125 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என கூறி எவரையும் திருப்பி அனுப்பவில்லை. நிலவேம்பு குடிநீருக்காக 2000 கிலோ பொடி கையிருப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment