இந்தியாவில் சிகிச்சைக்காக விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்-சுஷ்மா

இந்தியாவில் சிகிச்சைக்காக பல பாகிஸ்தானியர்கள் சிகிச்சைக்கு விசா கேட்டு 

டுவிட்டரில் சுஷ்மாவிடம் உதவி பெற்றுள்ளனர்.இந்நிலையில் பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்த உஜாயிர் ஹியுமாயூன் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், "எனது 3 வயது மகளுக்கு அவசரமாக இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உடனடியாக விசா வழங்கி உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்" எனக்கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சுஷ்மா, உங்களின் மகள் இருதய அறுவை சிகிச்சைக்காக விசா வழங்கப்படுகிறது. விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறோம்" எனக்கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்