அறுவை சிகிச்சை பெற மருத்துவ, 'விசா
பாகிஸ்தானைச் சேர்ந்தவர், முகமது அஷ்ரப். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 'இவருக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். டில்லியில் உள்ள, மருத்துவமனை ஒன்றில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற, அஷ்ரப் விரும்பினார்.
இதையடுத்து, தன் தந்தைக்கு, மருத்துவ விசா வழங்கக் கோரி, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு, அஷ்ரபின் மகன், ஹமீது, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த, சுஷ்மா சுவராஜ், முகமது அஷ்ரபுக்கு, மருத்துவ விசா வழங்க உத்தரவிட்டு உள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, ஹமீது அனுப்பியுள்ள பதிலில், 'மனிதநேயம் மிக்க உங்கள் செயலை, மறக்க மாட்டோம்' என, தெரிவித்து உள்ளார்.

Comments
Post a Comment