குழந்தைகள் பலி - உ.பி.,

கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, குழந்தைகள் இறப்பை தடுக்க, உ.பி., அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அரசு மருத்துவமனைகளில், போதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மீண்டும், 16 குழந்தைகள் இறந்துள்ளன. இது குறித்து, அந்த மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சமீபத்தில், 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. குழந்தைகளின் உயிரிழப்புக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல; அது போலவே, உரிய சிகிச்சையும் வழங்கி உள்ளோம். அந்த குழந்தைகள், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், இங்கு அழைத்து வரப்பட்டன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்