‘சக்தி’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை வரலட்சுமி அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கும் சக்தி என்ற 

திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியானது.மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு சக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது. இதனால் மூன்று மொழிகளுக்கும் உண்டான மூன்று விதமான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி, மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்