சொந்த நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட தானமாக வழங்கிய நபர்

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் சுவாமி (50), இவர் மிகவும் ஏழ்மையானவர் 

மற்றும் படிப்பறிவு இல்லாதவர். மேலும், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.அப்படி பல பிரச்சனைகள் இருந்தும் தனக்கான வீட்டு நிலத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக வழங்கியுள்ளார்.அங்கு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், வசித்த வீட்டை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக வழங்கிவிட்டு வசிப்பதற்கு இடமில்லாமல் நடை பாதையில் வசித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்களும் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ராஜ்கிஷோர் கூறியதாவது: நான் பள்ளிக்கூடம் போனது இல்லை, ஆனால் குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்