மெர்சல் ரிலீஸ் ஆகுமா? - விஷாலின் அதிரடி

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினமான 

அக்டோபர் 18 முதல் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படம் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் வெள்ளி முதல் அதாவது அக்டோபர் 6 முதல் எந்த புதிய திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்பட மாட்டாது என்று விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு மேலும் 10% கேளிக்கை வரிகள் தமிழ்ப்படங்களுக்கும், 20% பிறமொழி படங்களுக்கும் விதித்துள்ளதை எதிர்த்தே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 'மெர்சல்' திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்