போக்குவரத்துக்கழக கட்டடம் இடிந்து 8 பேர் பலி

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வரையின் மேற்கூறை இன்று(அக்.,20) அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்களை சிகிச்சைகாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

விபத்து தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு செய்யப்படும். நாகை பொறையார் போக்குவரத்து பணிமனைக்கு செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கட்டட விபத்தில் உயிரிழந்தோரில் 7 பேர் டிரைவர்கள். ஒருவர் நடத்துனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்