காரில் பிரசவித்த பெண்ணிற்கு 5 வருட இலவச பயணம் - ஓலா

புனேவைச் சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் சிங் - கிஷோரி. நிறைமாத கர்ப்பிணியாக 

இருந்த கிஷோரிக்கு, கடந்த அக்டோபர் 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அதையடுத்து, அருகில் இருந்த கமலா நேரு மருத்துவமனைக்கு செல்ல, ஓலா காரை புக் செய்தார் ரமேஷ் சிங். ஆனால், காரில் செல்லும் போது கிஷோரிக்கு வலி அதிகமானது. அதைத் தொடர்ந்து காரிலேயே அவருக்கு பிரசவமும் ஏற்பட்டது. இதையடுத்து, வண்டியை கவனமாக ஓட்டிய ஓட்டுனர், விரைவாக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றார். தாயும், சேயும் அங்கு நலமாக இருக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாய் கிஷோரிக்கும், அவரது குழந்தைக்கும் ஒரு சிறப்பு கூப்பனை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மூலம், அவர்கள் இருவரும் அடுத்த 5 வருடங்கள் ஓலா காரில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்