ஏலத்திற்கு வந்த தாவூத் சொத்து
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு, மும்பை மற்றும் அவுரங்காபாதில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு, இதற்கு முன், 2001, 2013 மற்றும் 2015ல் முயற்சிகள் நடந்தன.
ஆனால், தாவூத் மீதான பயத்தால், அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை.அவன் மீதான வழக்குகளின் அடிப்படையில், மும்பை மற்றும் அவுரங்காபாதில், தாவூத்துக்கு சொந்தமான, ஆறு சொத்துக்கள் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளன. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Comments
Post a Comment