பெங்களூரில் கடற்கன்னி போராட்டம்

பெங்களூரில் கடற்கன்னி போராட்டம்

பெங்களூரில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுவதை கண்டிக்கும் வகையில், சாலையின் பள்ளத்தில் தேங்கிய நீரில் அமர்ந்து, கடற்கன்னி போன்று வேடமணிந்த பெண், புதுமையான போராட்டம் நடத்தினார்.குண்டும், குழியுமாக சாலைகள் இருப்பதை கண்டிக்கும் வகையிலும், அவற்றை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடும் வகையிலும், மாடல் அழகி ஒருவர், புதுமையான போராட்டம் நடத்தியுள்ளார். பிரதான சாலை ஒன்றில், தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில், கடற்கன்னி போன்று வேடமணிந்த அந்த பெண் அமர்ந்து, தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்