ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம்: மோடி

இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:உங்களுடைய கடின உழைப்பும் அதற்காக நீங்கள் ஈட்டும் வருவாயின் மதிப்பினை இந்த அரசு நன்கு புரிந்து கொள்கிறது, இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதில் தான்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 6 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் வெறும் 5.7 சதவீதம் தான் இருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் இருந்த பின்னர், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும் வரும் காலாண்டில் 7.7 சதவீத வளர்ச்சி பெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
கார் விற்பனை, விமான போக்குவரத்து, விமான சரக்கு சேவை, மற்றும் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: வளர்ச்சியில் இந்தியா புதிய உச்சத்தை எட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுவருகிறது என உறுதியளிக்கிறேன். ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த பரிந்துரைகளின் படி மாற்றங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். இவ்வாறு மோடி பேசினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்