பேஸ்புக்கில் போட்டாவுடன் ஒரு செய்தியை பதிவிட்ட வாலிபருக்கு அடித்த அதிர்ஷ்டம்.!
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சீஷ் மஞ்சேரி . இவருக்கு பல வருடமாக பெற்றோர் பெண் பார்த்து வந்தும் பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் ரஞ்ஜீஷ் ஒரு செய்தியை பதிவை செய்தார்.அதில் எனக்கு இன்னும் திருமணம் நிச்சயிக்கபடவில்லை. திருமணத்துக்கு பெண் தேடி வரும் நிலையில் உங்களுக்கு பெண் யாராவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.எண் வயது 34 எனக்கு எந்த கோரிக்கையும் இல்லை. மேலும் எனக்கு பெண்ணை பிடிக்க வேண்டும்.
நான் புகைப்பட கலைஞராக உள்ளேன் என பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் பெற்றோருடன் அவர் இருக்கும் போட்டவையும் சேர்த்து வெளியிட்டிருந்தார் .இதனையடுத்து இந்த பதிவை 41000 பேர் சேர் செய்ததால் வைரலாகியுள்ளது. மீண்டும் இரு தினங்களுக்கு முன்னர் ரஞ்ஜீஷ் ஒரு பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் . அதில் தனக்கு பெண் கிடைத்துவிட்டதாகவும் அதனை பற்றிய தகவலை நேரம் வரும்போது சொல்வதாகவும் பதிவிட்டிருந்தார்.எனக்கு உதவிய அனைத்து மீடியா நண்பர்களுக்கும் நன்றி என தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருவதோடு பலரும் அவரது திருமணத்துக்கு செல்ல ஆர்வத்தோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment