'பேஸ்புக்'கில் மீண்டும் சர்ச்சை 'வீடியோ'

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அசாமில் உள்ள, ஜோர்கட் முகாமில் பணியாற்றி வரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர், பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில், தன் உயரதிகாரிகள் மீது புகார் கூறியிருந்தார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில் மீண்டும், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'ஓய்வின்றி வேலை செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். சரியான உணவு இல்லை. வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் துவங்கி உள்ளேன்' என, கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தி வருவதாக, மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்