பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று
முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை விரைவில் விஜய் டிவி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Comments
Post a Comment