சட்டப்படி நடந்த திருமணம் செல்லாது :உச்ச நீதிமன்றம்

'திருமணமாகி இருந்தாலும், மனைவிக்கு, 18 வயது பூர்த்தி ஆகாவிட்டால், அவருடன், கணவர் உறவு கொள்வது, பாலியல் பலாத்கார குற்றம்' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு, குழந்தை திருமணம் நடப்பதை தடுக்கும் என கருதுவதால், இந்த வழக்கில், மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது என, தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு, 18 வயது பூர்த்தியாகாத சிறுமியருக்கு திருமணம் நடப்பதை, சட்டப்படி தடுக்கும். இந்த உத்தரவு, மத்திய அரசுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது. இவ்வாறு அவர் கூறினார். 1860ம் ஆண்டு சட்டப்படி, மனைவி, 15 - 18 வயதுக்குள் இருந்தால், அவருடன் உறவு கொள்ளும், அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு தொடுக்க முடியாது. இந்த ஷரத்தை, 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்