Posts

Showing posts from September, 2017

புதுயுகப் பாப்பா பாட்டு

Image
ஓடிட வழியில்லைப் பாப்பா – உனக்கிங்கு  ஓய்வெடுக்க நேரமில்லைப் பாப்பா கூடி விளையாடிடப் பாப்பா - எந்தக் குழந்தையும் வருவதில்லைப் பாப்பா காலை எழுந்தவுடன் கார்ட்டூன் - பின்பு  பாடம் கற்க ஒரு கான்வெண்ட் மாலை முழுவதும் ட்யூஷன் - என்று  பழக்க படுத்தப்பட்டாய் பாப்பா சொல்லில் உயர்வு ஆங்கிலமே என்பார் - அதைச் சொல்லச் சொல்லி பூரிப்பார் பாப்பா தாய்மொழித் தமிழை மறந்து - நித்தம்  பிறமொழி கற்பிப்பார் பாப்பா சாதியில்லை என்பார் பாப்பா - சாதிச் சான்றிதழின்றி ஏதும் நடவாது பாப்பா நீதியும் கல்வியும் இன்று -செல்வமுள்ள  இடம்சென்று செருமடிப் பாப்பா ஸ்மார்ட்போனில் மூழ்கி சொந்தங்கள் மறவாதே  இயர்போன் இயற்கையை ரசி மாடர்ன் யுகத்திலும் மனிதநேயம் வேண்டும்  இதை உணர்ந்துக் கொள்ளடிப் பாப்பா புதுமை பெண்ணாயினும் பண்பாடு மறவாதே  நல்புத்தகங்கள் வழிகாட்டியாகும் என்றுமே  தாய்மண்ணும் நம்தாய் என்றுணர்வாய் - இதுவே  இன்று கற்கவேண்டிய பாடமடி பாப்பா எழுத்தாளர்: ரா.கீர்த்திகா

பிரதமர் மோடி மீது ராகுல் பல குற்றசாட்டு

Image
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைப்பதற்காக 3 நாள்  பயணமாக காங்., துணைத் தலைவர் ராகுல், இன்று (செப்.,25) குஜராத் சென்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது : இந்திய இளைஞர்கள் உழைக்க விரும்புகிறார்கள். நாட்டை முன்னேற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை தர பா.ஜ., தவறி விட்டது. பிரதமர் மோடி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சரித்து விட்டார். அவர் கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பா.ஜ.விற்கு மனதில் இரக்கமோ, ஏழைகள் மீது அக்கறையோ இல்லை. ஆனால் பணக்காரர்களுக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருப்பார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் பிரதமர்? என்றார்.என மக்களிடையே பல குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார்.

ராணுவ பள்ளியில் மாணவியர் சேர்க்கை

Image
உ.பி.,ராணுவ பள்ளிகளில், நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதிக்கான மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தப்படும் இந்த பள்ளிகளில், படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில், உ.பி., மாநிலம், லக்னோவில் உள்ள, நாட்டின் முதல் ராணுவ பள்ளியில், வரும் கல்வியாண்டு முதல், மாணவியரும் சேர்க்கப்பட உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, உ.பி., ராணுவ பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 2018-ம் ஆண்டு முதல் 9ம் வகுப்பிற்கு மாணவியரும், 7ம் வகுப்பிற்கு மாணவர்களும், 'ஆன் - லைன்' மூலம், அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். நவ., 2க்குள், 600 ரூபாய் தேர்வுக் கட்டணத்தை, 'இ - சலான்' மூலம் செலுத்த வேண்டும். நவ., 4 வரை, விண்ணப்பதாரர்கள், தங்களுடைய, இ - சலான் மற்றும் ஆன் - லைன் நுழைவு படிவத்தில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளலாம். டிச., 15 முதல், நுழைவுத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, ஆன் - லைனில் பதிவிறக்கம் செய்யலாம். சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 2018 ஜனவரி மதம் நடைப...

கிடைப்பது எல்லாம் சீனப் பொருட்கள் :ராகுல்

Image
மேக் இன் இந்தியா என மோடி சொல்லி வந்தாலும் இங்கு கிடைப்பது சீனப் பொருட்கள் தான். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ‛மேக் இன் இந்தியா' என பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் கடிகாரம், கேமரா, ஆடைகள் என இங்குள்ள கடைகளில் சீனப் பொருட்கள் தான் கிடைக்கின்றன. குஜராத்தில் மோடி அரசு அமைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தான் செய்தது. ‛மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மோடி கூறினார். ஆனால் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை என்பதே இத்திட்டத்தின் சாதனை. பா.ஜ.,வின் ஆட்சியில் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் கலாசார புத்தகங்கள் விற்பனை

Image
ரயில்வே வாரியம், சமீபத்தில்,ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை கடைகள்  தொடர்பாக, புதிய கொள்கை திட்டம் ஒன்றை உருவாக்கியது.இதன்படி, நடைபாதையிலுள்ள புத்தக ஸ்டால்கள், மருந்து கடைகள், கலைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஆகிய அனைத்து கடைகளிலும், இந்திய பாரம்பரியம், கலாசாரம், நீதிபோதனை, நல்லொழுக்கம் தொடர்பான புத்தகங்கள், கட்டாயம் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். இதேபோல், ரயில்களின் நேர அட்டவணை, ரயில்கள் பற்றிய விபரம் அடங்கிய புத்தகங்கள் கட்டாயம் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். புதிய கொள்கையின்படி, பன்னோக்கு, 'ஸ்டால்'கள் அமைக்கப்படும். இவற்றில், புத்தகங்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கலை, பரிசுப் பொருட்கள், குடிநீர், மருந்து சீட்டு இன்றி வாங்கும் மருந்துகள், பால் பவுடர் போன்றவை விற்பனை செய்யப்படும். புதிய, 'ஸ்டால்'களில், பயணியரிடம், ரூ.100 வரை மட்டும் ரொக்க மாக பெறலாம். ரூ.100க்கு மேல், 'இ - வாலட்' மட்டுமே பயன்படுத்தப்படும். புதிதாக பன்னோக்கு 'ஸ்டால்', அமைக்க விரும்பும் தனி நபர்கள், சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் அகதிகளுக்கு 'சிம்' வழங்க தடை

Image
மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு 'சிம்' விற்பனை செய்வதற்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சர் தரனா ஹாலிம் கூறுகையில், 'நாங்கள் அம்மக்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு தயாராக உள்ளோம். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். இதனால் அலைபேசியுடன் வந்திருக்கும் அகதிகள் யாருக்கும் 'சிம்' வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல, அவர்கள் முகாமை விட்டு வெளியேறாதவாறும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என்றார். வங்கதேசத்தில் அடையாள அட்டை வழங்காத உள்நாட்டினருக்கே 'சிம்' வழங்கக்கூடாது என ஏற்கனவே தடை அமலில் உள்ளது.

மக்களின் பாதுகாப்பு கருதி தடை : அமெரிக்கா

Image
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்த தடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது. இந்நிலையில் டிரம்ப் கொண்டு வந்த பயண தடை சட்டம் முதற்கட்டமாக வரும் அக்.,18 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் வடகொரியா, வெனிசுலா, ஈரான், சாட், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாட்டு குடிமகன்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் தடை செய்யப்பட்ட நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகள் அரசு சம்மந்தமாக சந்திப்புகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு மட்டும் விலக்க அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

பட்டாசு வாங்க ஆதார் எண் கட்டாயம்

Image
தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண்  வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அனைத்து வித பட்டாசு விற்பனைக்கும் ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி குடோன்களில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள், ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளை வாங்கி, அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்காக, நேரடியாக குடோன்களை அணுகுகின்றனர். அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இல்லாத காரணங்களால் அதற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் எண்கள் பெறப்படுகிறது என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் வரி சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளன.

கணக்கில் வராத பணம் : எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன்

Image
கர்நாடக முன்னாள் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழிலதிபருமான சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் (செப்.,24) சோதனை நடைபெற்றது. மொத்தம் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.650 கோடிக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தார்த்திற்கு சொந்தமான ஐடி நிறுவனம், சுற்றுலா நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி மோசடிகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் :ராஜ்நாத் சிங்

Image
நிதி மோசடிகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் :ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் தலைமையில், டில்லியில், நேற்று, இணையதளம் வாயிலான, நிதி சார்ந்த குற்றங்களை தடுப்பது தொடர்பான, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உள்துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலெட்' உள்ளிட்டவை மூலம், பணப் பரிவர்த்தனை செய்யும்போது நடக்கும் மோசடிகள் தொடர்பாக, நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இதுபோன்ற மோசடியை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய, நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மோசடிகளை தடுக்க, விரைவில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது.

தீவிரவாதத்திற்கு பாக்., நிதியுதவி

Image
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக, இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளது. அண்டை நாடான  பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி  பெற்று, பிரிவினைவாத அமைப்புகள், இந்த வன்முறை சம்பவங்களை நடத்தி வருவதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு கூறியது. பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்; இது தொடர்பாக, இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதில், இரண்டு பேர், தங்கள் வாக்குமூலத்தை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்; அதில், பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.

திரிபுராவில் டி.வி., நிருபர் கொலை

Image
திரிபுரா மாநிலத்தின் மேற்கு மாவட்டம், கோவாய் பகுதிகளில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடித்தது. இது குறித்த செய்தி சேகரிக்க சென்ற டி.வி. சேனல் ஒன்றின் நிருபர் சாந்தனு போம் விக் படுகொலை செய்யப்பட்டார்.மான்ட்வாய் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவக்கின்றன. மேலும் கலவரம் பரவாமல் தடுப்பதற்காக மேற்கு திரிபுரா மற்றும் கோவாய் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டி.வி., நிருபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று இரவு முதல்வர் வீடு முன்பாக செய்தியாளர்கள் ஒன்று கூடி கோஷம் எழுப்பியபடி தர்ணா செய்தனர். தகவலறிந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சொகுசு பஸ்கள் விரைவில்

Image
பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு, இரண்டடுக்கு சொகுசு பேருந்துகளை இயக்கும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. சாலை போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கார்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. காரில் செல்வோரை, பேருந்துகளுக்கு மாற்ற முடியாது. சாலைகளை மேம்படுத்த, பெரும் நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில், இரண்டடுக்கு பேருந்துகள், போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வாக இருக்கும். இரண்டடுக்கு பேருந்துகள், முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். சாலையில் சாதாரண பேருந்து பயன்படுத்தும் பரப்பளவையே, இரண்டடுக்கு பேருந்துகளும் பயன்படுத்தும். ஆனால், இரண்டு மடங்கு பயணியர் பயணிக்கலாம்; லாபம் அதிகம் கிடைக்கும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒப்பந்தம் : சுஷ்மா சுவராஜ்

Image
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் ஐ.நா., சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில்  பங்கேற்ற, இந்திய  வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்க, பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, அந்த ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டும் செயல்படுவோம். இதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது. இந்த பூமியை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்துள்ளோம். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து, சர்வதேச சோலார் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்..

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

Image
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர்  டன்னல் என்ற பகுதியில் எஸ்.எஸ்.பி. படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் பயங்கரவாதிகள் இன்று இரவு திடீர் தாக்குதல் நடத்தினர் .இச்சம்பவத்தில் இரண்டு . வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

கள்ளச் சாராயம் தயாரிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை

Image
கள்ளச் சாராயம் தயாரிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை உ.பி.,யில் கள்ளச் சாராய சாவுகளை தடுப்பது தொடர்பாக, சக அமைச்சர்களுடன், முதல்வர் ஆதித்யநாத், நேற்று கலந்தாலோசித்தார். கூட்டத்திற்கு பின், உ.பி., அரசு வெளியிட்ட அறிக்கை: உ.பி.,யில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விஷத்தன்மையுள்ளதாக மாறி, அதனால், உயிர் பலி ஏற்பட்டால்,  அதற்கு காரணமானவர்களுக்கு, மரண தண்டனை  அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் ஷரத்து, கலால்சட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்தை, அரசு, விரைவில் பிறப்பிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை

Image
இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத 5.7 சதவித சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார தேக்க நிலை குறித்தும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அருண் ஜெட்லி தெரிவித்ததாவது:  பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்து, பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்ய தேவையான அதிரடி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

நிதி மோசடிகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் :ராஜ்நாத் சிங்

Image
நிதி மோசடிகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் :ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் தலைமையில், டில்லியில், நேற்று, இணையதளம் வாயிலான, நிதி சார்ந்த குற்றங்களை தடுப்பது தொடர்பான, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உள்துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலெட்' உள்ளிட்டவை மூலம், பணப் பரிவர்த்தனை செய்யும்போது நடக்கும் மோசடிகள் தொடர்பாக, நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இதுபோன்ற மோசடியை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய, நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மோசடிகளை தடுக்க, விரைவில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது.

தீவிரவாதத்திற்கு பாக்., நிதியுதவி

Image
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக, இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளது. அண்டை நாடான  பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி  பெற்று, பிரிவினைவாத அமைப்புகள், இந்த வன்முறை சம்பவங்களை நடத்தி வருவதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு கூறியது. பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்; இது தொடர்பாக, இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதில், இரண்டு பேர், தங்கள் வாக்குமூலத்தை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்; அதில், பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.

மெக்சிக்கோவில் பூகம்பம்

Image
மெக்சிகோவில் நிகழ்ந்த பூகம்பத்தில்  149 பேர் பலியாயினர்.   இதன் ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் பயங்கரமாக குழுங்கின. 44 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தால் இதுவரை 149 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிக்கோவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்ததாவது: மெக்சிக்கோவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். உங்களுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து

Image
தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு  ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான். இந்த வைரசை மழைக் காலத்தில் போலியோ சொட்டு மருந்துபோல ஒரே நேரத்தில் வழங்கினால் அழிக்க முடியும். இதனால் ரோட்டா வைரஸ் சொட்டு மருந்தை செப்.7ம் தேதி  முதல் கொடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டது. செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

திறந்தவெளியில் மலம் கழித்தவர்களை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

Image
திறந்தவெளியில் மலம் கழித்தவர்களை பிடித்த நகராட்சி ஊழியர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் 'துாய்மை இந்தியா' திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த,  முதல்வர் ரமண் சிங் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இம்மாநிலத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிலஸ்பூரில், திறந்தவெளியில் மலம் கழித்த, 10 பேரை, நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.அவர்களை, நாய் பிடிக்கும் வாகனத்தில் ஏற்றி, 15 கி.மீ., தொலைவுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள், 'திறந்தவெளியில் மலம் கழிக்க மாட்டோம்' என, கோஷமிட்டபடியே வந்தனர்.

பல கோடி சொத்தை உதறிவிட்டு துறவறம் போகும் தம்பதி

Image
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் மகள் அனாமிகா(34). இவர் சுமித் ரத்தோர் (35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுமித், தனது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். அதேபோல், அனாமிகா வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். இவர்களின் குடும்ப சொத்து ரூ.100 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த அவர்களுக்கு, சமீப காலமாக துறவறம் மெற்கொள்வதில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, துறவறம் செல்வது என அவர்கள் முடிவெடுத்தனர். பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் அதை தடுக்க முயன்றனர்.  ஆனால், தங்கள் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. மூன்று வயது அழகிய குழந்தை மற்றும் ரூ.100 கோடி சொத்துக்களை விட்டுவிட்டு அவர்கள் துறவறம் மேற்கொள்ளும் விவகாரம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமௌலியிடம் ஆலோசனை கேட்ட முதல்வர்

Image
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த  நகருக்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாடு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளார். எனவே அமராவதி, பாகுபலி படத்தில் காட்டப்பட்ட பிரமாண்ட அரண்மனை போன்று இருக்க வேண்டும் என விரும்பிய சந்திரபாபு நாயுடு, இயக்குனர் ராஜமௌலியை நேரில் அழைத்து சில ஆலோசனைகள் கேட்டாராம். அவரும் சில ஆலோசனைகளை கூறிவிட்டு வந்திருக்கிறார். அமராவதி தலைநகரை வடிவமைக்கும் பணியை முதலில் ஜப்பான் நிறுவனத்திடம் கொடுத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அவர்களின் வடிவமைப்பு அவருக்கு பிடிக்காததால், தற்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நாரிமன் பாஸ்டர் என்றா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.அந்நிலையில் அமராவதி நகரத்துக்கான வடிவமைப்புகளை சந்திரபாபு நாயுடுவிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது. ஆனால், அதிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தலைநகரின் வெளித்தோற்றம் பாகுபலி படத்தின் அரண்மனை போல இருக்கு வேண்டும் என சந்திரபாபு நாயுடு விரும்புகிறாராம். எனவே, ராஜமௌலியிடம் மீண்டும் அழைத்து ஆலோசனை கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். ராஜமௌலி சம்மதித்தால், அ...

மகனின் சடலத்துடன் விடிய விடிய கொட்டும் மழையில் நின்ற தாய்

Image
ஹைதராபாத்தில் வெங்கடேஸ்வரா நகர் என்கிற பகுதியில் வசிப்பவர் ஈஸ்வரம்மா.  இவரின் 11 வயது மூத்த மகன் சுரேஷ் கடந்த 13ம் தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் மரணம் அடைந்தான்.  இந்நிலையில், அவனது உடலை வீட்டிற்குள்ளே எடுத்து செல்ல ஈஸ்வரம்மா வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் குப்தா அனுமதிக்கவில்லை. அவரின் மகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது எனவும், எனவே, சடலத்தை வீட்டிற்குள்ளே எடுத்து வருவது அபசகுணமாக அமையும் எனக்கூறி அவர் மறுத்து விட்டார். இதனால், தன்னுடைய மகனின் உடலை வீட்டின் வெளியே வைத்துக்கொண்டு, கொட்டும் மழையில் நின்றுள்ளார் ஈஸ்வரம்மா. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சடலைத்தை வீட்டின் உள்ளே வைக்க அனுமதி தருமாறு ஜெகதீஷுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவர் தனது நிலைப்பாடில் உறுதியாக இருந்ததால், உடனடியாக ஒரு கண்ணாடி சவப்பெட்டியை வரவழைத்து அதில் அவரின் மகனின் சடலைத்தை வைத்தனர். மேலும், இறுதி சடங்கிற்கு தங்களால் ஆன பண உதவியும் செய்தனர்.  இப்படி ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட ஜெகதீஷின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குழந்தைகள்...

காதலியுடன் உல்லாசம் ; முகநூலில் பரபரப்பு

Image
கேரளாவில் ,ஜவுளிக்கடையில் வேலை செய்யும் அந்த பெண், தன்னுடைய காதலன்  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டாயப்படுத்தி தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், அதை தனக்கு தெரியாமல் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி விட்டதாகவும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நெடுங்கூடம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் லினு(23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும் கடந்த சில மாதங்களாக அவர் வாலிபர் லினுவுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதேபோல், அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை பழிவாங்கவே வீடியோ எடுத்ததாகவும், ஆனால், அதை பேஸ்புக்கில் லைவ் வீடியோவாக வெளியிடவில்லை எனவும் லினு மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அந்த பெண்ணும், லினுவும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் அதில் இருந்தன. இதையடுத்து, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லினுவை, காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர்.

மக்களை திரட்டி போராட்டம் : மு.க.ஸ்டாலின்

Image
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19  பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தினார். ஆனால், ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தினகரன் தரப்பும் மற்றும் திமுகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளது. வருகிற 20ம் தேதி அந்த வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இந்நிலையில், திண்டுக்கல்லில் நேற்று திமுக சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் “ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்காவிட்டால் மக்கள் மன்றத்தை நாடுவோம். அது ஆட்சியை கவிழ்ப்பதற்காக இல்லை. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்னும் 3 நாட்களில் நீதிமன்றத்தின் மூலம் நல்ல செய்தி வரும். அப்படி இல்லையெனில் மக்களை திரட்டி எடப்பாடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என அவர் பேசினார்.

ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு

Image
ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை டிஐஜி ரூபா வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  சிறையில் ஆய்வு நடத்திய அவர் சசிகலாவிற்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கு அங்க சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் அவர் புகர் கூறினார். இதனையடுத்து அவர் போக்குவரத்துதுறை அதிகாரியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, கர்நாடக அரசு அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் ரூபாவிற்கு அந்த விருதை வழங்கினார்.

மற்றவர் மனதை புண்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா?

Image
மற்றவர் மனதை புண்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? உங்களுக்கு பிடித்தவர்களின் மனதை காயப்படுத்தாமல் வாழ்ந்திட முடியுமா? கொஞ்சம் கஷ்டம்தான் ஒருவருக்கு நல்லவராக தெரியவேண்டுமானால் இன்னொருவருக்கு கெட்டவர்களாக தான் தெரிவோம். ஆனால் நம்மால் இயன்றவரை பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்கலாமே. உங்கள் முயற்சியை வெற்றி பெற்றதாக மாற்றிட சில யோசனைகள். உடனே நோ சொல்லாதீங்க : உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை உங்கள் மனதிற்குபிடித்தவர் செய்தால் அங்கேயே முகத்திற்கு நேராக சட்டென சொல்வதை தவிர்த்திடுங்கள். இது அவர்களின் நல்லதுக்காகத்தான் சொல்கிறீர்கள் என்றாலும் அது வருத்தமடையச் செய்யக்கூடும். பேசுவதற்கு முன்னால் : ஒரு விஷயத்தை எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. எதிரிலிருப்பவரின் எண்ணங்களையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்படி உங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை எனில் நீங்கள் பேசுவதற்கு முன்னால் நீஙக்ள் சொல்லப்போகும் கருத்து என்ன என்பதை பரீசிலித்துக் கொள்ளுங்கள். சமூகவலைதளம் : இன்றைய இளைஞர்களின் முக்கிய இட...

இசையமைப்பாளர் தரண் – நடிகை தீக்‌ஷிதா திருமணம்.

Image
நடிகை தீக்‌ஷிதா திருமணம். பாக்யராஜ் இயக்கிய  ‘பாரிஜாதம்’  படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்  தரண்.   போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை ’ என 25 படங்களில் இசையமைத்துள்ளார்.தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இதற்கிடையில் நடிகை தீக்‌ஷிதாவுக்கும் தரணுக்கும் காதல் மலர்ந்து ,இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற  15-ந்தேதி திருப்பதியில்  நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

சிகரெட்டின் விலை 1000 ரூபாய்

Image
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது : புகையிலை  உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதமாக   வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் , மருத்துமனைகள்  போன்ற பகுதிகளில் முற்றிலுமாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது , மேலும் இதனுடைய விலையினை 2020 ஆண்டிற்குள் 1000 ரூபாயாக   உயர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.

தெலுங்கு கட்டாயம் கற்க வேண்டும்: தெலுங்கானா அரசு

Image
தெலுங்கானா அரசு டிசம்பர் 15 முதல் 19 ம் தேதி வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும். மேலும் ,அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வர உள்ளது. தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என கடுமையாக எச்சரித்துள்ளார்.

'தமிழ் கன்' அட்மின் கைது

Image
தமிழ் கன்' அட்மின் கைது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் கவுரிசங்கர், எம்.இ. பட்டதாரியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கிவந்துள்ளார். இவர் புதுப்படங்கள் வெளியாகும் போது தனது செல்போனில் அதை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து தமிழ் கன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கபாலி, விவேகம், சிங்கம் -3  ஆகிய படங்களை தமிழ் கன் இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து தமிழ்கன் இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் குழுவின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முன்னேறுகிறது :அமித் ஷா

Image
இந்தியா முன்னேறுகிறது :அமித் ஷா இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது. எதிர்க் கட்சிகளால், இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட முன்வைக்க முடியவில்லை. பொருளாதாரத்தில் நம் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் குறுகிய காலகட்டத்திற்குள்  நாட்டினை மேலும் முன்னேற்ற பாதையில்  கொண்டு  செல்ல அணைத்து முயற்சியும்  எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆண்களே! 30-வயசுக்கு மேல கல்யாணமா???அப்ப இதக் கண்டிப்பா படிங்க!

Image
பெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் ஒருபக்கம் இருக்க ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதாக வயதாக பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் குறைகிறது. ஒரு ஆராய்ச்சியில் 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கால தாமதமாக தான் கருவுறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் கர்ப்பமடைந்துவிடுகிறார்களாம். இது பற்றி சில உண்மைகளை இந்த பகுதியில் காணலாம். டெஸ்ரோன் அளவுகள் ஆண் தனது 30 வயதிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1% டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி விந்தணுக்களின் உற்பத்தியும் முப்பது வயதிற்கு மேல் குறைகிறது. விந்தணுக்களின் தரம் விந்தணுக்களின் தரத்தை பற்றி சிந்திக்கும் போது 35 வயதிற்கு மேல் விந்தணுக்களின் தரம் குறைய தொடங்குகிறது. முதுமை விந்து இயக்கத்தையும் குறைக்கிறது. விந்தணுக்களின் இயக்கம் விந்தணுக்களின் தரம், மற்றும் இயக்கம் 25 வயதிற்கு முன்னால் மிகச்சிறப்பாக இருக்கும். இதன் தரம் மற்றும் இய...

சிறுவன் கொலை : கூர்கான் பள்ளி

Image
அரியானா மாநிலம் கூர்கானில் உள்ள ரியான் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த  பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 10 பேரிடம் விசாரணை நடத்தினர்.சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெற்றோர், உறவினர்கள், மற்ற மாணவர்களின் பெற்றோரும் போராட்டம் நடத்தினர். தனது மகன் கொலை செய்யப்பட்ட விட்டதாக, சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான ஊழியர்களை தாக்கினால் விமானத்தில் இடம் கிடையாது

Image
விமான ஊழியர்களை தாக்கினால் விமானத்தில் இடம் கிடையாது மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது: விமான ஊழியர்களை தாக்கினால் 6 மாதமும், திட்டினால் 3 மாதமும் பறக்க தடை விதிக்கப்படும். ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கு மேல் பறக்க தடை விதிக்கப்படும். பயணிகள் நலன் கருதி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வாகன தயாரிப்பாளர்களுக்கு நிதின் கட்கரி எச்சரிக்கை

Image
பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் வாகனங்களால், அதிகளவில் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க, மாற்று சக்திக்கு, மாற வேண்டும். பேட்டரிகள் மூலம் இயக்கப்படும், மின்சக்தி கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை தயாரிக்க வேண்டும். இதற்கு, வாகன தயாரிப்பாளர்கள் மாறாவிட்டால், நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். 'மின் வானங்கள் தயாரிக்க வேண்டும்' என, முன்னர் அழைப்பு விடுத்த போது, 'பேட்டரி விலை மிகவும் அதிகம்' என, வாகன தயாரிப்பாளர்கள் கூறினர். இப்போது, பேட்டரியின் விலை 40 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்தால், பேட்டரி விலை மேலும் குறையும். மின் வாகனங்கள் தொடர்பான கொள்கையை, அரசு விரைவில் வெளியிட உள்ளது. நாட்டின் பல இடங்களில், மின்வாகனங்களுக்கு, 'ரீசார்ஜ்' நிலையங்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், இந்தியாவில், மின் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படும் என்பது உறுதி. என, வாகன தயாரிப்பாளர்களை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

ஒரே நாளில் 2 அடி உயர்ந்த தமிழக அணைகள்

Image
மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாள் ஒன்றுக்கு  2 அடி உயர்ந்து 22,077 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதே போன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியை எட்டி உள்ளது.

இந்திய ராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு

Image
இந்திய ராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு மத்திய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன்  இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை கிடைத்தது. இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரி அஸ்வனி குமார் என்பவர் கூறுகையில், ராணுவ போலீசில் பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம் பாலினம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.