'தமிழ் கன்' அட்மின் கைது
தமிழ் கன்' அட்மின் கைது
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் கவுரிசங்கர், எம்.இ. பட்டதாரியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கிவந்துள்ளார். இவர் புதுப்படங்கள் வெளியாகும் போது தனது செல்போனில் அதை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து தமிழ் கன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கபாலி, விவேகம், சிங்கம் -3 ஆகிய படங்களை தமிழ் கன் இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து தமிழ்கன் இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் குழுவின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment