புதுயுகப் பாப்பா பாட்டு
ஓடிட வழியில்லைப் பாப்பா – உனக்கிங்கு
ஓய்வெடுக்க நேரமில்லைப் பாப்பா
கூடி விளையாடிடப் பாப்பா - எந்தக்
குழந்தையும் வருவதில்லைப் பாப்பா
ஓய்வெடுக்க நேரமில்லைப் பாப்பா
கூடி விளையாடிடப் பாப்பா - எந்தக்
குழந்தையும் வருவதில்லைப் பாப்பா
காலை எழுந்தவுடன் கார்ட்டூன் - பின்பு
பாடம் கற்க ஒரு கான்வெண்ட்
மாலை முழுவதும் ட்யூஷன் - என்று
பழக்க படுத்தப்பட்டாய் பாப்பா
பாடம் கற்க ஒரு கான்வெண்ட்
மாலை முழுவதும் ட்யூஷன் - என்று
பழக்க படுத்தப்பட்டாய் பாப்பா
சொல்லில் உயர்வு ஆங்கிலமே என்பார் - அதைச்
சொல்லச் சொல்லி பூரிப்பார் பாப்பா
தாய்மொழித் தமிழை மறந்து - நித்தம்
பிறமொழி கற்பிப்பார் பாப்பா
சொல்லச் சொல்லி பூரிப்பார் பாப்பா
தாய்மொழித் தமிழை மறந்து - நித்தம்
பிறமொழி கற்பிப்பார் பாப்பா
சாதியில்லை என்பார் பாப்பா - சாதிச்
சான்றிதழின்றி ஏதும் நடவாது பாப்பா
நீதியும் கல்வியும் இன்று -செல்வமுள்ள
இடம்சென்று செருமடிப் பாப்பா
சான்றிதழின்றி ஏதும் நடவாது பாப்பா
நீதியும் கல்வியும் இன்று -செல்வமுள்ள
இடம்சென்று செருமடிப் பாப்பா
ஸ்மார்ட்போனில் மூழ்கி சொந்தங்கள் மறவாதே
இயர்போன் இயற்கையை ரசி
மாடர்ன் யுகத்திலும் மனிதநேயம் வேண்டும்
இதை உணர்ந்துக் கொள்ளடிப் பாப்பா
இயர்போன் இயற்கையை ரசி
மாடர்ன் யுகத்திலும் மனிதநேயம் வேண்டும்
இதை உணர்ந்துக் கொள்ளடிப் பாப்பா
புதுமை பெண்ணாயினும் பண்பாடு மறவாதே
நல்புத்தகங்கள் வழிகாட்டியாகும் என்றுமே
தாய்மண்ணும் நம்தாய் என்றுணர்வாய் - இதுவே
இன்று கற்கவேண்டிய பாடமடி பாப்பா
நல்புத்தகங்கள் வழிகாட்டியாகும் என்றுமே
தாய்மண்ணும் நம்தாய் என்றுணர்வாய் - இதுவே
இன்று கற்கவேண்டிய பாடமடி பாப்பா
எழுத்தாளர்: ரா.கீர்த்திகா


Comments
Post a Comment