திரிபுராவில் டி.வி., நிருபர் கொலை
திரிபுரா மாநிலத்தின் மேற்கு மாவட்டம், கோவாய் பகுதிகளில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடித்தது. இது குறித்த செய்தி சேகரிக்க சென்ற டி.வி. சேனல் ஒன்றின் நிருபர் சாந்தனு போம் விக் படுகொலை செய்யப்பட்டார்.மான்ட்வாய் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவக்கின்றன. மேலும் கலவரம் பரவாமல் தடுப்பதற்காக மேற்கு திரிபுரா மற்றும்
கோவாய் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டி.வி., நிருபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று இரவு முதல்வர் வீடு முன்பாக செய்தியாளர்கள் ஒன்று கூடி கோஷம் எழுப்பியபடி தர்ணா செய்தனர். தகவலறிந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment