தமிழ் செம்மொழி தினம் : கவிதை
தமிழ் செம்மொழி தினம் : கவிதை தனி மொழியாம் தமிழ்மொழி இது சுயமாய் வளர்ந்த மொழி..!! செம்மொழியாம் இம்மொழி செங்கோல் ஈன்ற மொழி..!! சங்கம் வளர்த்த மொழி சங்கென முழங்கும் மொழி..!! நாகரிகம் தோற்றிய மொழி நாள்தோறும் போற்றும் மொழி.. கொஞ்சம் இலக்கணமும் கெஞ்சும் இலக்கியமும் கொஞ்சி பேசும் இயல்பு மொழி.. காதலும் காவியமும் ஒன்றாய் பினைந்த மொழி.. கண்களும் காட்சியுமாய் நம் மரபாய் வளர்ந்த மொழி.. ஆசை காதலாய் கொஞ்சும் கோபமாய் நெஞ்சம் தேடும் இன்ப மொழி.. பிள்ளைதமிழ் காதல்தமிழ் காவியதமிழ் காணும்தமிழ் இலக்கியதமிழ் இயல்புதமிழ் கொஞ்சும்தமிழ் கொல்லைதமிழ் முத்தமிழ் செந்தமிழ் தனித்தமிழ் என்றும்தமிழ் எதிலும்தமிழ் தனித்து நின்று தலை ஓங்க செய்யும் நம்பிக்கை தமிழ் ..!!



Comments
Post a Comment