' துர்நாற்றத்தை குறைக்க மரங்களை நாடுங்கள் ' - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
' துர்நாற்றத்தை குறைக்க மரங்களை நாடுங்கள் ' - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
இந்தியாவில் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதற்கு ஏற்றார்போல் திடக்கழிவு கொட்டப்படும் குப்பை கிடங்குகளும் அதிகரித்து வருகின்றன. இதில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குப்பை கிடங்குகளை சுற்றி, பசுமையை ஏற்படுத்தும் மரங்களை நட்டு, துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்; காற்று, நீர், சத்த மாசுவை அளவிட சென்சார் அடிப்படையிலான கருவிகள் இருப்பது போன்று, துர்நாற்றத்தை அளவிடவும் ஒரு கருவி தேவை போன்ற பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் ஏற்படும் சுகாதார பிரச்சனை பொது தொந்தரவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment