கிடைப்பது எல்லாம் சீனப் பொருட்கள் :ராகுல்
மேக் இன் இந்தியா என மோடி சொல்லி வந்தாலும் இங்கு கிடைப்பது சீனப் பொருட்கள் தான். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ‛மேக் இன் இந்தியா' என பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் கடிகாரம், கேமரா, ஆடைகள் என இங்குள்ள கடைகளில் சீனப் பொருட்கள் தான் கிடைக்கின்றன. குஜராத்தில் மோடி அரசு அமைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தான் செய்தது.
‛மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மோடி கூறினார். ஆனால் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை என்பதே இத்திட்டத்தின் சாதனை. பா.ஜ.,வின் ஆட்சியில் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments
Post a Comment