ரயில் நிலையங்களில் கலாசார புத்தகங்கள் விற்பனை

ரயில்வே வாரியம், சமீபத்தில்,ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை கடைகள் 

தொடர்பாக, புதிய கொள்கை திட்டம் ஒன்றை உருவாக்கியது.இதன்படி, நடைபாதையிலுள்ள புத்தக ஸ்டால்கள், மருந்து கடைகள், கலைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஆகிய அனைத்து கடைகளிலும், இந்திய பாரம்பரியம், கலாசாரம், நீதிபோதனை, நல்லொழுக்கம் தொடர்பான புத்தகங்கள், கட்டாயம் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். இதேபோல், ரயில்களின் நேர அட்டவணை, ரயில்கள் பற்றிய விபரம் அடங்கிய புத்தகங்கள் கட்டாயம் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். புதிய கொள்கையின்படி, பன்னோக்கு, 'ஸ்டால்'கள் அமைக்கப்படும்.
இவற்றில், புத்தகங்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கலை, பரிசுப் பொருட்கள், குடிநீர், மருந்து சீட்டு இன்றி வாங்கும் மருந்துகள், பால் பவுடர் போன்றவை விற்பனை செய்யப்படும். புதிய, 'ஸ்டால்'களில், பயணியரிடம், ரூ.100 வரை மட்டும் ரொக்க மாக பெறலாம். ரூ.100க்கு மேல், 'இ - வாலட்' மட்டுமே பயன்படுத்தப்படும். புதிதாக பன்னோக்கு 'ஸ்டால்', அமைக்க விரும்பும் தனி நபர்கள், சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்