கள்ளச் சாராயம் தயாரிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை

கள்ளச் சாராயம் தயாரிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை


உ.பி.,யில் கள்ளச் சாராய சாவுகளை தடுப்பது தொடர்பாக, சக அமைச்சர்களுடன், முதல்வர் ஆதித்யநாத், நேற்று கலந்தாலோசித்தார். கூட்டத்திற்கு பின், உ.பி., அரசு வெளியிட்ட அறிக்கை:
உ.பி.,யில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விஷத்தன்மையுள்ளதாக மாறி, அதனால், உயிர் பலி ஏற்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் ஷரத்து, கலால்சட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்தை, அரசு, விரைவில் பிறப்பிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்