இறைச்சி விளம்பரத்தில் விநாயகர்

இறைச்சி விளம்பரத்தில் விநாயகர்

ஆஸ்திரேலியாவில், எம்.எல்.ஏ. என்ற இறைச்சி நிறுவனம் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் எடுத்தது, அதில் இறைச்சி உணவு அடங்கிய மேஜையை சுற்றி, விநாயகர், இயேசு, புத்தர், ஜூயுஸ் உள்ளிட்ட கடவுள்கள் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள், ஆட்டுக்குட்டி இறைச்சி உணவை புகழ்வது போல விளம்பரம் உருவாக்கப்பட்டது.
இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா இந்திய சங்கத்தின் செய்தி தொடர்பாளர் நிதின் வாசிஸ்வத் கூறுகையில், '' விநாயகர் விளம்பரம் அர்த்தம் இல்லாமல் உள்ளது. அவர் ஆட்டுக்குட்டி இறைச்சியை சாப்பிடுவது போல விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். இது குறித்து ஆஸ்திரேலியா தர வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்