கேரள அமைச்சருக்கு அனுமதி மறுப்பு
கேரள அமைச்சருக்கு அனுமதி மறுப்பு
சீனாவில் செப்- 11ல் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா அமைச்சர் சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால், அவருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

Comments
Post a Comment