நிதி மோசடிகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் :ராஜ்நாத் சிங்

நிதி மோசடிகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் :ராஜ்நாத் சிங்


மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் தலைமையில், டில்லியில், நேற்று, இணையதளம் வாயிலான, நிதி சார்ந்த குற்றங்களை தடுப்பது தொடர்பான, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உள்துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலெட்' உள்ளிட்டவை மூலம், பணப் பரிவர்த்தனை செய்யும்போது நடக்கும் மோசடிகள் தொடர்பாக, நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இதுபோன்ற மோசடியை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய, நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மோசடிகளை தடுக்க, விரைவில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்