வாகன தயாரிப்பாளர்களுக்கு நிதின் கட்கரி எச்சரிக்கை
பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் வாகனங்களால், அதிகளவில் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க, மாற்று சக்திக்கு, மாற வேண்டும். பேட்டரிகள் மூலம் இயக்கப்படும், மின்சக்தி கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை தயாரிக்க வேண்டும். இதற்கு, வாகன தயாரிப்பாளர்கள் மாறாவிட்டால், நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
'மின் வானங்கள் தயாரிக்க வேண்டும்' என, முன்னர் அழைப்பு விடுத்த போது, 'பேட்டரி விலை மிகவும் அதிகம்' என, வாகன தயாரிப்பாளர்கள் கூறினர். இப்போது, பேட்டரியின் விலை 40 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்தால், பேட்டரி விலை மேலும் குறையும்.
மின் வாகனங்கள் தொடர்பான கொள்கையை, அரசு விரைவில் வெளியிட உள்ளது. நாட்டின் பல இடங்களில், மின்வாகனங்களுக்கு, 'ரீசார்ஜ்' நிலையங்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், இந்தியாவில், மின் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படும் என்பது உறுதி. என, வாகன தயாரிப்பாளர்களை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

Comments
Post a Comment