தீவிரவாதத்திற்கு பாக்., நிதியுதவி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக, இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளது.


அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி பெற்று, பிரிவினைவாத அமைப்புகள், இந்த வன்முறை சம்பவங்களை நடத்தி வருவதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு கூறியது. பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்; இது தொடர்பாக, இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதில், இரண்டு பேர், தங்கள் வாக்குமூலத்தை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்; அதில், பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்