தெலுங்கு கட்டாயம் கற்க வேண்டும்: தெலுங்கானா அரசு
தெலுங்கானா அரசு
டிசம்பர் 15 முதல் 19 ம் தேதி வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும். மேலும் ,அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வர உள்ளது. தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என கடுமையாக எச்சரித்துள்ளார்.

Comments
Post a Comment