மெக்சிக்கோவில் பூகம்பம்

மெக்சிகோவில் நிகழ்ந்த பூகம்பத்தில் 149 பேர் பலியாயினர். இதன் ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் பயங்கரமாக குழுங்கின. 44 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தால் இதுவரை 149 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிக்கோவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்ததாவது: மெக்சிக்கோவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். உங்களுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்