இந்தியாவில் சொகுசு பஸ்கள் விரைவில்
பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு, இரண்டடுக்கு சொகுசு பேருந்துகளை இயக்கும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
சாலை போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கார்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. காரில் செல்வோரை, பேருந்துகளுக்கு மாற்ற முடியாது. சாலைகளை மேம்படுத்த, பெரும் நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில், இரண்டடுக்கு பேருந்துகள், போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வாக இருக்கும். இரண்டடுக்கு பேருந்துகள், முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். சாலையில் சாதாரண பேருந்து பயன்படுத்தும் பரப்பளவையே, இரண்டடுக்கு பேருந்துகளும் பயன்படுத்தும். ஆனால், இரண்டு மடங்கு பயணியர் பயணிக்கலாம்; லாபம் அதிகம் கிடைக்கும்.

Comments
Post a Comment