பிரதமர் மோடி மீது ராகுல் பல குற்றசாட்டு

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைப்பதற்காக 3 நாள் 

பயணமாக காங்., துணைத் தலைவர் ராகுல், இன்று (செப்.,25) குஜராத் சென்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது : இந்திய இளைஞர்கள் உழைக்க விரும்புகிறார்கள். நாட்டை முன்னேற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை தர பா.ஜ., தவறி விட்டது. பிரதமர் மோடி யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சரித்து விட்டார். அவர் கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பா.ஜ.விற்கு மனதில் இரக்கமோ, ஏழைகள் மீது அக்கறையோ இல்லை. ஆனால் பணக்காரர்களுக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருப்பார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் பிரதமர்? என்றார்.என மக்களிடையே பல குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்