உள்நாட்டு , வெளிநாட்டு கறுப்பு பணம்

உள்நாட்டு , வெளிநாட்டு கறுப்பு பணம்

இந்தியர்கள், கணக்கில் காட்டாமல், பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்து, உறுதியான புள்ளி விபரங்கள், இதுவரை சேகரிக்கப்படவில்லை. 2013ல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்து கணக்கெடுக்க, கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. தேசிய பொது நிதி கொள்கை நிறுவனம், தேசிய பொருளாதார நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் உதவியுடன், இந்த பணிகள் நடந்தன.இந்த கமிட்டி, மூன்று ஆண்டு ஆய்வு செய்து, பொருளாதார விவகாரங்களுக்கான, பார்லிமென்ட் நிலைக்குழுவிடம், சமீபத்தில், அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் பற்றி, அமெரிக்க ஆய்வு நிறுவனமான, 'குளோபல் பைனான்ஷியல் இன்டக்ரிட்டி' அமைப்பு, சமீபத்தில் தகவல்களை வெளியிட்டது.அதில், கூறியுள்ளதாவது: இந்தியர்கள், 2005 முதல், 2014 வரையிலான, 10 ஆண்டுகளில், 50 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளனர். இதில், 11 லட்சம் கோடி ரூபாய், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்