திறந்தவெளியில் மலம் கழித்தவர்களை பிடித்த நகராட்சி ஊழியர்கள்
திறந்தவெளியில் மலம் கழித்தவர்களை பிடித்த நகராட்சி ஊழியர்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 'துாய்மை இந்தியா' திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த, முதல்வர் ரமண் சிங் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இம்மாநிலத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிலஸ்பூரில், திறந்தவெளியில் மலம் கழித்த, 10 பேரை, நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.அவர்களை, நாய் பிடிக்கும் வாகனத்தில் ஏற்றி, 15 கி.மீ., தொலைவுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள், 'திறந்தவெளியில் மலம் கழிக்க மாட்டோம்' என, கோஷமிட்டபடியே வந்தனர்.

Comments
Post a Comment