வங்கதேசத்தில் அகதிகளுக்கு 'சிம்' வழங்க தடை

மியான்மரில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு 'சிம்' விற்பனை செய்வதற்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சர் தரனா ஹாலிம் கூறுகையில், 'நாங்கள் அம்மக்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு தயாராக உள்ளோம். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். இதனால் அலைபேசியுடன் வந்திருக்கும் அகதிகள் யாருக்கும் 'சிம்' வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல, அவர்கள் முகாமை விட்டு வெளியேறாதவாறும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என்றார். வங்கதேசத்தில் அடையாள அட்டை வழங்காத உள்நாட்டினருக்கே 'சிம்' வழங்கக்கூடாது என ஏற்கனவே தடை அமலில் உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்