துாய்மை இந்தியா சின்னம் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுமா ?
'துாய்மை இந்தியா' தொடர்பான சின்னம், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுமா என்பது குறித்த விபரங்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அளித்த பதில்: புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளில், துாய்மை இந்தியா திட்டம் தொடர்பான,'லோகோ' எனப்படும், சின்னம் இடம்பெறுமா என்பது குறித்த தகவல்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க இயலாது. இத்தகைய தகவல்களை வெளியிடுவது, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அறிவியல், பொருளாதார நலன் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

Comments
Post a Comment