கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் : இணையத்தளத்தில் பரபரப்பான செய்தி
கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் : இணையத்தளத்தில் பரபரப்பான செய்தி
கேரளா , குருவாயூரில் ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. மணமகன் மாங்கல்யம் கட்டிவிட்டு புதுமண தம்பதி யான இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்த ஒரு இளைஞரை பார்த்து மணப்பெண் உணர்ச்சி வசப்பட்டார். அந்த இளைஞர் அருகில் வர, தாலியை கழட்டி, மணமகனிடம் கொடுத்த மணப்பெண், ' இவர் என் காதலர். இவரை திருமணம் செய்ய என் வீட்டில் ஒப்புதல் தரவில்லை. எனவே தான் திருமணம் வரை காத்திருந்தேன். இனிமேல் என்னை யாரும் தடுக்க முடியாது' என்று கூறி விட்டு அந்த இளைஞருடன் புறப்பட்டு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற உடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட கேக்கை வெட்டி, மணமகள் விட்டு சென்றதை சந்தோஷமாக கொண்டாடினார் மணமகன் ,இது இணையத்தளத்தில் பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியது.
Published in அண்மைச் செய்திகள்

Comments
Post a Comment