பட்டம் பெற்ற பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசு
பட்டம் பெற்ற பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசு
இந்தியா, வடமாநிலங்களில் கல்வி பயிலுவோர் குறைவு , அதிலும் முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வி பயிலுவது குறைவு,ஆகையால் அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையிலும், பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அதுமட்டும் இல்லாமல் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Comments
Post a Comment