அவசர வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது :முதல்வர் யோகி ஆதித்யநாத்

அவசர வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது :முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.,யில்  வி.ஐ.பி.,க்கள் வரும் போது, வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால்  அந்த வழியில் வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. 'இது போன்ற அவசர வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது' என, மாநிலத்தில் உள்ள, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். முக்கிய தலைவர்கள் வரும் சாலைகளை முன் கூட்டியே அறிவித்து உள்ளூர் நாளிதழ்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், முன்கூட்டியே வெளியிட வேண்டும் அப்போது மாற்று பாதை ஏற்படுத்தி தரப்படும் , ஆனால் எந்த காரணத்தாலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்