கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளுக்கு பிரதமர் எச்சரிக்கை

கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளுக்கு பிரதமர் எச்சரிக்கை

சர்வதேச அளவில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை அரவணைப்பதில் கனடா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. சட்டவிரோதமான வழக்கு, உள்நாட்டு யுத்தம் மற்றும் தீவிரவாதம் ஆகிய காரணங்களால் தாய்நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு மதம், இனம், மொழி பாகுப்பாடு இல்லாமல் கனடா புகலிடம் வழங்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கனடா நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐயர்லாந்து பிரதமரான Leo Varadkar-வுடன் நேற்று மாண்ட்ரீயல் நகரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் பேட்டியளித்தபோது, ‘அனைவருக்காகவும் கனடா நாட்டின் கதவுகள் திறந்துள்ளன. ஆனால் ஒன்றை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். கனடா நாட்டில் புகலிடம் அளிப்பது தொடர்பாக சட்டங்கள் உள்ளன.சட்டங்களை மீறி முறையற்ற வகையில் கனடாவிற்குள் நுழைய வேண்டாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்