சமஸ்கிருதம் பாடத்தை படிக்க அனுமதிக்கவில்லை : ஜாதி
சமஸ்கிருதம் பாடத்தை படிக்க அனுமதிக்கவில்லை : ஜாதி
இந்தியா ஹரியானா பகுதியை சேர்ந்தவர் கௌஷல் பன்வார் என்ற பெண் சிறு வயது முதல் கல்வியில் சிறந்த மாணவியாக இருப்பவர்.அதுமட்டும் இல்லாமல் இளம் வயது முதல் சமஸ்கிருதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.ஆனால் இவர் தலித் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சமஸ்கிருதம் பாடத்தை படிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், கொளஷல் சமஸ்கிருத மொழியின் மீது ஆர்வம் கொண்டதை கண்ட அந்த ஆசியர் சமஸ்கிருதம் படிக்க வகுப்பிற்குள் அனுமதித்துள்ளார். அதிக ஆர்வம் கொண்டதால் அவர் படிப்பில் சிறந்து விளங்கினார்.பலரும் அவரை பலவாறு பேச அதை பொருட்படுத்தாது கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார் .படிக்கும்போதே, தன் பெற்றோருடன் மலம் அள்ளும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இதனை கஷ்டத்திற்கு பிறகு சமஸ்கிருதம் பாடத்தில் பி.எச்.டி. பட்டமும்,டெல்லியில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருத துறையில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதும் தான் ஜாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுவதாகவும், அவர்களுடைய வசவுகளையும் ,கேலிகளையும் புறந்தள்ளி சென்று கொண்டே இருப்பதுதான் தன்னுடைய வெற்றி என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment