ரூ.50 கோடி வரி ஏய்ப்பு பாலிவுட் நடிகர்களுக்கு நோட்டீஸ்


பாலிவுட் நடிகர்களுக்கு உரிய சேவை வரி செலுத்தாத காரணத்திற்கு விளக்கம் கோரி, சி.ஏ.ஜி நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் சிலர், குறைந்த வரி செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, பார்லிமென்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சி.ஏ.ஜி., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:சேவை வரி ஏய்ப்பு குறித்த, 156 வழக்குகள் விசாரணையில் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்புக்கான சேவை வரியை, ஒழுங்காக செலுத்தாத அல்லது குறைவாக செலுத்திய பாலிவுட் நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது போன்ற பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்