சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு !
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு !
இந்திய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.கடந்த 2016 ஆம் ஆண்டை விட 7.4 சதவீதம்அதிகமான சுற்றுலா பயணிகள் 2017 ஆம் ஆண்டு 7.88 லட்சம் பயணிகள் வந்துள்ளனர்..மின்னணு விசா மூலம் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தைவிட 2017 ஆம் வருடம் 8.36 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மின்னணு விசா மூலம் இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.இந்த விசாவை பயன்படுத்துபவர்களில் இங்கிலாந்துக்கு முதலிடம் பிடித்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த 12.9 சதவீதம் பேர், அமெரிக்காவை சேர்ந்த 12 சதவீதம் பேர், ஐக்கிய அரபு எமீரேட்சை சேர்ந்த 7.2 சதவீதம்பேர் பிரான்சை சேர்ந்த 6.4 சதவீதம் பேர், ஓமனை சேர்ந்த 6.1 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்த 5.4 சதவீதம் பேர் மின்னணு விசாவை பயன்படுத்தி இந்தியா வருகின்றனர்.

Comments
Post a Comment