19 வயதில் இன்ஸ்பெக்டர் : ஆசையை நிறைவேற்றிய காவல் துறை


சென்னையைச் சேர்ந்தவர் ஜூவ் தாமஸ். இவருக்கு ஸ்டீவன் மேத்யூ(19) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார். இவர்கள் தொழில் நிமித்தம் காரணமாக கத்தார் நாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு கத்தார் சென்றிருந்தபோது, அங்கு இந்திய தூதரகம் நடத்திய மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார். இதில் ஸ்டீவின் மேத்யூவும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடைய லட்சியம், விருப்பம் குறித்து மோடி கேட்டறிந்தார். அப்போது ஸ்டீவின் மேத்யூ நான் ஒரு நாள் காவல் துறை அதிகாரியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்டீவின் மேத்யூவும், அவருடைய குடும்பத்தினரும் சென்னை வந்தனர்.
அப்போது போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஸ்டீவின் மேத்யூவின் போலீஸ் அதிகாரி ஆசையை அவருடைய பெற்றோர் எடுத்துக்கூறினர்.அவரது ஆசையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் போலீஸ் கமிஷ்னர் ஏ.கே. விஸ்வநாதன் இறங்கினார்.
அதன் பின் அசோக் நகரில் ஒரு மணி நேரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் அமர்வதற்கு கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார். அந்த உடையை அணிந்து மாலை அசோக் நகர் போலீஸ் நிலையத்துக்கு ஸ்டீவின் மேத்யூ வந்து இறங்கினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் சென்ற ஸ்டீவின் மேத்யூவிடம் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்