முதல்வர் மற்றும் துணை முதல்வர் ; அதிமுக


சென்னையில் அதிமுக இரு அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி , கட்சியில் யார் யாருக்கு என்ன பொறுப்புக்கள் என முதல்னர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் - எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் - கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் செயல்படுவார்கள். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இரு அணிகள் இணைப்பிற்கு பிறகே மனுவை திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்