புதிய இந்தியாவை உருவாக்க உழையுங்கள்: பிரதமர்
புதிய இந்தியாவை உருவாக்க உழையுங்கள்: பிரதமர்
ஒவ்வொரு அமைச்சகங்களில் முதன்மை நிலை மற்றும் செயலாளர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். பணிகள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்ற விதம் தொடர்பாக அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.அடுத்தடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிரதமர் பிறப்பித்து வருகிறார்.
வேளாண்மை, குடிநீர், கல்வி, உற்பத்தி உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு, சோலார் சக்தி உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகள் தங்களது கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் தெளிவான கொள்கையுடன் உழையுங்கள் என அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Comments
Post a Comment