மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி
மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி
தமிழ் திரையுலகில் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்யும் நிலைமையில் உள்ள ஒரே நடிகர் விஜய்சேதுபதிதான். தற்போது புரியாத புதிர், கருப்பன், என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவு மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த கனவும் விஜய்சேதுபதிக்கு நனவாகியது. ஆம், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிதான் முக்கிய வேடம். மணிரத்தினம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதியை தவிர மேலும் மூன்று நாயகர்கள் என்று கூறி அவர்களுடைய பெயரையும் கூறினாராம். அவர்கள் பெயரை கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காத, மயங்காத விஜய்சேதுபதி என்னுடைய கேரக்டர் எனக்கு பிடித்திருக்கின்றது. யார் நடித்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கின்றேன்' என்று கூலாக கூறினாராம்.

Comments
Post a Comment