அசாமில், மாநில சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர், ஹிமந்த பிஸ்வா சர்மா, கூறியதாவது: நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் சட்டசபையின் அடுத்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், அரசுப் பணிகளில் மட்டுமல்ல, அரசின் எந்த சேவையிலும் ஈடுபட முடியாது; கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் முறை கைவிடப்படுகிறது. அதற்கு பதில், அந்தக் குடும்பத்துக்கான புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு, அரசின் நலத் திட்ட பலன்களும் வழங்கப்படாது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்